கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே உள்ள அகலக்கோட்டை கிராமத்தில் வசிப்பவர் மணி (39) கூலி தொழிலாளி. இவரது 16 வயது மகள் இவர் அடிக்கடி வயிற்று வலி வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினமும் மீண்டும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
மருத்துவரிடம் பார்த்து விட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். நேற்று காலை வீட்டை விட்டு அவர் வெளியே வரவில்லை. அருகில் இருந்தவர்கள் கதவை தட்டிய போது உள்பக்கமாக தாளிடப்பட்டு இருந்தது. இதை அடுத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, நந்தினி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரின் குடும்பத்தினர் கொடுத்த புகாரின் பேரில் தளி போலீசார் வழக்குப்பதிவு செய்து, உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.