கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே முத்தூர் அடவிசாமிபுரத்தைச் சேர்ந்த மனோஜ்குமார் (22), நேபாள பெண்ணைக் காதலித்து திருமணம் செய்ய முயன்றார். இரு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் மனமுடைந்த மனோஜ்குமார் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவரது தந்தை முனிராஜ் அளித்த புகாரின் பேரில் தளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.