தேன்கனிக்கோட்டை அருகே இளம் பெண் மாயம்.

0பார்த்தது
தேன்கனிக்கோட்டை அருகே இளம் பெண் மாயம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே ஜெபெண்டா பகுதியைச் சேர்ந்த 20 வயது இளம் பெண், கடந்த 17-ஆம் தேதி அகலக்கோட்டை மாதேஸ்வரர் கோயிலுக்குச் சென்றபோது திடீரென மாயமானார். அவரை பல இடங்களில் தேடியும் காணாததால், அவரது பெற்றோர் தளி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் மீது சந்தேகம் இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதன் பேரில், காவல்துறையினர் அந்த இளம் பெண்ணை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி