ராயக்கோட்டை அருகே வீட்டில் திருட முயன்ற வாலிபர் கைது

646பார்த்தது
ராயக்கோட்டை அருகே வீட்டில் திருட முயன்ற வாலிபர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே, கொத்தூரைச் சேர்ந்த விவசாயி ஜெகதீஷின் தாயார் சாரதா, வீட்டில் பீரோவைத் திறந்து திருட முயன்ற திம்மராஜை தடுத்தபோது அவர் தள்ளிவிட்டுத் தப்ப முயன்றார். சாரதாவின் சத்தம் கேட்டு ஓடிவந்தவர்கள் திம்மராஜைப் பிடித்து தர்ம அடி கொடுத்து ராயக்கோட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். ஜெகதீஷ் அளித்த புகாரின் பேரில் ராயக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து திம்மராஜைக் கைது செய்தனர்.