அஞ்செட்டி தலைமைக் காவலர் பணியிட மாற்றம்

70பார்த்தது
அஞ்செட்டி தலைமைக் காவலர் பணியிட மாற்றம்
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகில் மாவனட்டி கிராமத்தில் கடந்த 2ஆம் தேதி சிறுவன் கடத்திக் கொலை செய்யப்பட்டார். கடத்தல் குறித்து சிறுவனின் பெற்றோர் அஞ்செட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றனர். அப்போது தலைமைக் காவலர் சின்னதுரை இதுகுறித்து சரிவர விசாரணை நடத்தாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட மாவட்ட கண்காணிப்பாளர் தங்கதுரை தலைமைக் காவலரை ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்தி