கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அன்னை நகரில் வசிக்கும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த தலைமை ஆசிரியர் சுதாகரன் (51), அஞ்செட்டி தாலுகாவில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 27-ம் தேதி, பள்ளியில் படிக்கும் 5 ஆம் வகுப்பு மாணவிக்கு இவர் பாலியல் தொந்தரவு அளித்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி, போக்சோ சட்டத்தின் கீழ் சுதாகரனைக் கைது செய்துள்ளனர்.