2027-ம் ஆண்டில் நடைபெற உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கான முன் சோதனை பயிற்சி கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி வட்டாரத்தில் மூன்று நாட்கள் நடைபெறுகிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பு துறை இணை இயக்குனர் சின்னதுரை தலைமையில், பொறுப்பு அலுவலர் மற்றும் அஞ்செட்டி தாசில்தார் செந்தில்குமார் ஆகியோர் ஆசிரியர்கள், வி.ஏ.ஓ.க்கள், கிராம ஊராட்சி செயலாளர்கள், சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி ஊழியர்களுக்கு பயிற்சி அளித்தனர். இந்த பயிற்சி, கணக்கெடுப்பு பணிகளை திறம்பட மேற்கொள்ள உதவும்.