ராயக்கோட்டை அருகே இருதரப்பினர் தகராறு-4 பேர் மீது வழக்கு

532பார்த்தது
ராயக்கோட்டை அருகே இருதரப்பினர் தகராறு-4 பேர் மீது வழக்கு
ராயக்கோட்டை அருகே முகலுார் பகுதியைச் சேர்ந்த டிரைவர் முனியப்பன் (27) என்பவரை, அதே பகுதியைச் சேர்ந்த பிரவீன்குமார் (25) தரப்பினர் சொத்து தகராறு காரணமாக வழிமறித்து, தகாத வார்த்தைகளால் திட்டி, வாகனத்தின் முன்புற கண்ணாடியை சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக முனியப்பன் அளித்த புகாரின் பேரில் பிரவீன்குமார் மற்றும் அவரது தாய் உமா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், உமா அளித்த புகாரின் பேரில் முனியப்பன் மற்றும் ராஜா ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி