கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர்-பேரிக்கை சாலையில் உள்ள தனியார் பள்ளியில் நேற்று கிருஷ்ணகிரி ஓபன் ஸ்டேட் காம்பெடிஷன் 2026 கராத்தே போட்டி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய். பிரகாஷ் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்து போட்டியை துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில் பள்ளியின் தாளாளர், இருபால் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.