கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே கே. ஓசூர் கிராமத்தைச் சேர்ந்த 40 வயது கூலித்தொழிலாளி மாதேஷின் 15 வயது மகள், ஐ.டி.ஐ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். ஒரு வாலிபரை காதலித்து வந்த மாணவியை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த மாணவி நேற்று முன்தினம் மாலை குளியலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். குடும்பத்தினர் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் மாணவி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தேன்கனிக்கோட்டை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.