கெலமங்கலம்: வடமாநில தொழிலாளி ஏரியில் வாலிபர் சடலம் மீட்பு

1பார்த்தது
கெலமங்கலம்: வடமாநில தொழிலாளி ஏரியில் வாலிபர் சடலம் மீட்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே அக்கொண்டப்பள்ளியில் வசித்து வந்த ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சிவராம் சிங் (22) என்பவர் மூன்று நாட்களாக காணாமல் போன நிலையில், அவரது உடல் அக்கொண்டப்பள்ளி ஏரியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. தனியார் தொழிற்சாலையில் தொழிலாளியாகப் பணியாற்றி வந்த சிவராம் சிங், தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். அவரது இறப்புக்கான காரணம் குறித்து கெலமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி