கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே லாட்டரி சீட்டுகள் விற்ற அன்சர் (46) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ. 2 ஆயிரம் மதிப்புள்ள 10 லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ. 1,600 பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்து கெலமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.