மறைந்த முரசொலி மாறனின் 92வது பிறந்தநாளை முன்னிட்டு கிருஷ்ணகிரி மேற்கு நகர கழக பொறுப்பாளர் அஸ்லம் மற்றும் கிழக்கு நகர கழக பொறுப்பாளர் வேலுமணி தலைமையில் திமுக மாவட்ட அலுவலகத்தில் அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. திமுக கழகத் தோழர்கள் அனைவரும் கலந்து கொண்டு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.