கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகேயுள்ள உப்பாரப்பள்ளி பகுதியை சேர்ந்த முனி வெங்கடப்பாவின் மனைவி காவேரியம்மா (60), உடல்நலக்குறைவால் ஒரு வருடமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் குணம் அடையாததால் மனமுடைந்து, வீட்டில் இருந்த மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தளி போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.