தேன்கனிக்கோட்டையில் ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

0பார்த்தது
தேன்கனிக்கோட்டையில் ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதிய சங்கம் சார்பில், தேன்கனிக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்ட தலைவர் முனிராஜுலு தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், கிராம உதவியாளர்கள், ஊராட்சி எழுத்தர் மற்றும் விடுபட்டவர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக 7,850 ரூபாய் வழங்க வேண்டும் என்றும், மருத்துவக் காப்பீடு திட்ட குளறுபடிகளை நீக்கி, காசில்லா மருத்துவக் காப்பீடாக அமுல்படுத்த வேண்டும் என்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. மாநில துணைத்தலைவர் நாகராஜன் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டு உரையாற்றினர்.
Job Suitcase

Jobs near you