போச்சம்பள்ளி: கார் மின் கம்பத்தில் மோதி மின் பொறியாளர் காயம்

502பார்த்தது
போச்சம்பள்ளி: கார் மின் கம்பத்தில் மோதி மின் பொறியாளர் காயம்
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே பேருஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த மின் பொறியாளர் சரவணன் (45), நேற்று முன்தினம் (மே 21) இரவு மீன் பிடிக்கச் சென்றுவிட்டு மே-22 காலை காரில் திரும்பும்போது, நாகரசம்பட்டி அருகே உள்ள வளைவில் நிலைதடுமாறி மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானார். இதில் மின் கம்பம் சாய்ந்ததோடு, சரவணனுக்கு தலையில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து நாகரசம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி