அஞ்செட்டி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

1பார்த்தது
அஞ்செட்டி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
அஞ்செட்டி அருகே உள்ள ஜேசுராஜபுரம்பகுதியில் கிராம மக்களுக்கு கடந்த சில வாரங்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படாததால், பொதுமக்கள் நேற்று காலை காலி குடங்களுடன் அஞ்செட்டி-ஒகேனக்கல் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் போராட்டம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்த அஞ்செட்டி போலீசார் மற்றும் அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சீராக குடிநீர் வழங்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து, பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

தொடர்புடைய செய்தி