கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே தளி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் மாணவ-மாணவிகளுக்கு பால்வினை நோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், இளம் பருவத்தில் மாணவர்களுக்கு ஏற்படும் உடல் மற்றும் மன ரீதியான மாற்றங்கள், போதைப்பொருள் பயன்பாட்டை ஒழித்தல் போன்ற முக்கிய விஷயங்கள் குறித்து விளக்கப்பட்டது. இதில் ஏராளமான மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.