அஞ்செட்டி அருகே உடலை தோண்டி எடுத்து பரிசோதனை.

2பார்த்தது
அஞ்செட்டி அருகே உடலை தோண்டி எடுத்து பரிசோதனை.
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே மொட்டியூர் பகுதியைச் சேர்ந்த ராஜப்பா (65) உடல்நலக்குறைவால் இறந்ததாகக் கூறப்பட்ட நிலையில், அவரது மகன் சிவப்பா தந்தையின் மரணத்தில் சந்தேகம் தெரிவித்து அஞ்செட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து, தாசில்தார் பாலாஜி முன்னிலையில் ராஜப்பாவின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு, மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்திலேயே உடற்கூறு ஆய்வு நடத்தினர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே அவர் கொலை செய்யப்பட்டாரா என்பது தெரியவரும்.

தொடர்புடைய செய்தி