கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அடுத்த அக்கொண்டப்பள்ளி பகுதியில் கிராம தேவதை கரகம்மா தேவி கோவில் பல வருடங்களுக்குப் பின்னர் இந்த கோவில் குடமுழுக்கு விழா கடந்த 10 ஆம் தேதி அன்று நடைபெற்றது. இந்த விழாவில் விரதமிருந்து மேள, தாளங்கள் முழங்க தீர்த்தக்குடம் ஏந்தி கோவிலுக்கு ஊர்வலமாக வந்த நிலையில் கரகம்மா தேவிக்கு கலசங்கள் வைத்து சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு வாசனை திரவியங்களால் அபிஷேகம், அலங்காரம் செய்து வழிபட்டனர்.