தேன்கனிக்கோட்டை: மாரியம்மன் கோயிலில் தங்க நகை திருட்டு

612பார்த்தது
தேன்கனிக்கோட்டை: மாரியம்மன் கோயிலில் தங்க நகை திருட்டு
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே ஜார்க்கலட்டி மாரியம்மன் கோயிலில் நேற்று முன்தினம் நள்ளிரவில் மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, அம்மன் கழுத்தில் இருந்த 5 பவுன் நகை மற்றும் வெள்ளி கிரீடத்தை திருடிச் சென்றனர். நேற்று காலை கோயில் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்ட பொதுமக்கள் தேன்கனிக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் பொதுமக்களிடையே விசாரணை நடத்தி, சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி