தேன்கனிக்கோட்டை: மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விழா..

2பார்த்தது
தேன்கனிக்கோட்டை: மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விழா..
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே கெம்பட்டி ஊராட்சி கள்ளப்பள்ளி பகுதியில் உள்ள மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. கணபதி பூஜை, யாகசாலை பூஜைகளைத் தொடர்ந்து, புனித நீர் ஊற்றி கோபுர கலசத்திற்கும் மூலவருக்கும் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. மகா தீபாராதனைக்குப் பிறகு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.