கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே சாலிவாரம் பகுதியில் தென்னந்தோப்பில் நடந்து சென்ற முனுசாமி (80), மல்லேஷ் (45), சென்னப்பன் (55) ஆகிய மூவர் மீது, தென்னை மரத்தில் இருந்த குரங்கு ஒன்று தேனீக்கூட்டைக் கலைத்ததால், தேனீக்கள் கொட்டி பலத்த காயமடைந்தனர். அவர்களை மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.