நின்ற லாரி மீது டூ வீலர் மோதி 2 பேர் உயிரிழப்பு.

2பார்த்தது
நின்ற லாரி மீது டூ வீலர் மோதி 2 பேர் உயிரிழப்பு.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே பெரியதோகரை பகுதியை சேர்ந்த ராமாச்சாரி (36) மற்றும் அதே நிறுவன ஊழியர் முனிராஜ் (37) ஆகியோர் நேற்று முன்தினம் டூவீலரில் தேன்கோட்டையிலிருந்து தளி நோக்கி சென்று கொண்டிருந்தனர். ஓசூர் அக்ரஹாரம் அருகே சாலையில் நின்ற லாரி மீது டூவீலர் மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்த தேன்கனிக்கோட்டை போலீசார் இருவரின் உடலை மீட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி