ரோஜா நாற்று செடிகளை சேதப்படுத்திய காட்டு யானைகள்

368பார்த்தது
ரோஜா நாற்று செடிகளை சேதப்படுத்திய காட்டு யானைகள்
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே மரக்கட்டா பகுதியில் நேற்று 3 காட்டு யானைகள் விவசாயி நாகராஜ் வீட்டின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து, வெள்ளரி தோட்டத்தையும் சேதப்படுத்தின. மேலும், விவசாயி திம்மராயன் நர்சரி தோட்டத்தில் ரோஜா நாற்று செடிகளையும் சேதப்படுத்தின. யானைகள் வனப்பகுதிக்குள் சென்றன. இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி