கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள தளி ஊராட்சி ஒன்றியம் கும்மளாபுரத்தில் நேற்று காலை புகுந்த 4 காட்டு யானைகள் விவசாய நிலங்களைச் சேதப்படுத்தியுள்ளன. யானைகள் கிராமத்தைச் சுற்றியே முகாமிட்டுள்ளதால், பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். அசம்பாவிதம் தவிர்க்க யானைகளை உடனடியாக வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.