கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே மாவணட்டி பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி மாதேவனின் மனைவி வெண்ணிலா (34), கடந்த ஒரு மாதமாக குடும்ப தகராறு காரணமாக நேற்று விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை குடும்பத்தினர் மற்றும் உதவியாளர்கள் மீட்டு அஞ்செட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வெண்ணிலா உயிரிழந்தார். இது குறித்து அஞ்செட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.