கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகேயுள்ள ராமன்தொட்டி பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார் (22) தொழிலாளி. இவருக்கும், இவரது மனைவிக்கும் இடையே குடும்பத் தகராறு வந்துள்ளது. இதனால் மனைவி கோபித்துக்கொண்டு பெற்றோர் வீட்டிற்குச் சென்றுவிட்டார். இதனால் சிவக்குமார் மாமனார் வீட்டிற்குச் சென்று மனைவியை குடும்பம் நடத்த அழைத்துள்ளார். அவர் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சிவக்குமார் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தளி போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.