கர்நாடகாவின் பெங்களூருவைச் சேர்ந்த 62 வயதான விறகு வெட்டும் தொழிலாளி செலுவப்பா, கடந்த 13-ஆம் தேதி தனது சொந்த ஊரான தேன்கனிக்கோட்டை அடுத்த ஒசட்டி கிராமத்தில் உள்ள அண்ணன் வீட்டிற்குச் சென்றார். அவர் வீடு திரும்பாத நிலையில், நேற்று முன்தினம் இரவு ஒசட்டி ஏரியில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது. தேன்கனிக்கோட்டை போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.