
ஊத்தங்கரை அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே கல்லாவி வெள்ளி மலையைச் சேர்ந்த மித்ரா (17) என்ற மாணவி, உறவு முறையில் உள்ள வாலிபருடன் பழகியதாகக் கூறப்படுகிறது. இதை வீட்டில் கண்டித்ததால் மனமுடைந்த மித்ரா, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த கல்லாவி போலீசார், மித்ராவின் உடலைக் கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






















