ஊத்தங்கரை அருகே சீட்டாட்டம் ஆடிய 2 வாலிபர் கைது

50பார்த்தது
ஊத்தங்கரை அருகே சீட்டாட்டம் ஆடிய 2 வாலிபர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை போலீசார் சென்னப்பநாயக்கனூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மதுபான கடைக்கு பின் பகுதியில் சீட்டாட்டம் ஆடிக்கொண்டிருந்த 3 பேரை சுற்றி வளைத்து பிடித்தனர். ஒருவர் தப்பி ஓடிவிட்ட நிலையில் 2 பேரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் இதே பகுதியை சேர்ந்த முருகன் (57) செல்வகுமார் (26) என்பது தெரியவந்தது. இதை அடுத்து 2 பேரை போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய சின்னமணி என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி