சிங்காரப்பேட்டை: விஷ மருந்து தின்ற 3 குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை

686பார்த்தது
சிங்காரப்பேட்டை: விஷ மருந்து தின்ற 3 குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை
சிங்காரப்பேட்டை அருகே தளபதி நகரைச் சேர்ந்த ஆனந்த், லட்சுமணன் ஆகியோரின் குழந்தைகள், ஆலமரத்துக்கொட்டாய் செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்த நிலையில், வீட்டில் இருந்த விஷ மருந்தை சத்து மாவென நினைத்து ஜெயசித்ரா (6), ஹரிப்பிரியா (5), வசந்த் (6) ஆகிய மூன்று பேரும் தின்று மயங்கி விழுந்தனர். உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி