கிருஷ்ணகிரி: மாற்றுத்திறனாளிகளுக்குநல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி

76பார்த்தது
கிருஷ்ணகிரி: மாற்றுத்திறனாளிகளுக்குநல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உள்ள பகல் நேர பராமரிப்பு மையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் மற்றும் தீபாவளி முன்னிட்டு நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வட்டார வள பொறுப்பு மேற்பார்வையாளர் வசந்தி தலைமை தாங்கினார்.

ஊத்தங்கரை தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் முருகன் முன்னிலை வகித்தார். ஊத்தங்கரை சார்பு நீதிபதி மற்றும் வட்ட சட்ட பணிகள் ஆணை குழு தலைவர் ஜி. கலைவாணி மற்றும் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிபதி ஜி. அமர்ஆனந்த் ஆகியோர் மாற்றுத்திறனாளிகளுக்கு சட்டத்தில் உள்ள சலுகைகள், பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு தீபாவளியை முன்னிட்டு பல்வேறு நல உதவிகளையும் வழங்கினார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும், வயதில் மூத்த மாற்று திறனாளிகளுக்கும், பள்ளியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கும் புத்தாடைகள், பரிசுகள், நிதி உதவி, இனிப்பு காரம் ஆகியவற்றை பாபு முகமது சையத், உமா மகேஸ்வரி, மௌலி, சந்தியா, சவிதா சரவணன், உதவி தலைமை ஆசிரியர் கு. கணேசன் ஆகியோர் வழங்கி வாழ்த்தினார்கள்.

தொடர்புடைய செய்தி