காவேரிப்பட்டினத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தொழில் அதிபர் கே. வி. எஸ். தணிகாசலம் அவர்களின் தாயார் திருமதி ராஜாம்மாள் அவர்களின் மறைவினையொட்டி அவரின் திருஉருவப்படத்திற்கு முன்னாள் மத்திய அமைச்சர் கே. வி. தங்கபாலு மலர் தூவி மரியாதை செலுத்தினார். கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் தாம்சன் பேட்டையை சோந்தவர் தொழில் அதிபர் கே. வி. சண்முகம் அவர்களின் மனைவியும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கே. வி. எஸ். தணிகாசலம், கே. வி. எஸ். திருநாவுக்கரசு, திமுக மாநில வர்த்தக அணியின் மாநில துணைச் செயலாளர் கே. வி. எஸ் சீனிவாசன் ஆகியோரின் தாயார் திருமதி ராஜம்மாள் கடந்த 22-ம் தேதி காலமானார்.
இதனை அடுத்து திருமதி ராஜம்மாள் சண்முகம் ஆகியோரின் நினைவேந்தல் மற்றும் திரு உருவப் படம் திறப்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான கே. வி. தங்கபாலு கலந்துக் கொண்டு ராஜம்மாள் மற்றும் சண்முகம் ஆகியோரின் திரு உருவப்படங்களுக்கு மாலை அணிவித்து மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். பின்னர் தாயை இழந்து வாடும் குடும்பத்தினர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினரும் முன்னாள் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தலைவருமான எல். சுப்பிரமணியன் ஆகியோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.