ஊத்தங்கரை: போலி இன்சூரன்ஸ் ஆவணம்: விவசாயி மீது வழக்குப்பதிவு

889பார்த்தது
ஊத்தங்கரை: போலி இன்சூரன்ஸ் ஆவணம்: விவசாயி மீது வழக்குப்பதிவு
ஊத்தங்கரை அடுத்த கெங்கநாயக்கன்பட்டியைச் சேர்ந்த விவசாயி சசிகுமார் (42) மீது சிங்காரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடந்த 2022, நவம்பர் 17 அன்று அவரது உறவினர் பார்த்திபன் ஓட்டிச் சென்ற டூவீலர் விபத்தில் பார்த்திபன் மற்றும் வேல்முருகன் காயமடைந்தனர். இந்த விபத்தில், சசிகுமார் தனது இருசக்கர வாகனத்திற்கு இன்சூரன்ஸ் எடுத்ததுபோல் போலி நகல்களை வழங்கி இழப்பீடு கோரியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி