முன்பருவ கல்வி பயிலும் குழந்தைகளுக்கு சீருடை வழங்கும் விழா. கிருஷ்ணகிரி கிழக்கு ஒன்றியம், காட்டிநாயனப்பள்ளி ஊராட்சியில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம், அங்கன்வாடி மையத்தில் முன்பருவ கல்வி பயிலும் குழந்தைகளுக்கு சீருடைகள் வழங்கும் விழாவில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தே. மதியழகன், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் ஆகியோர்கள் கலந்துகொண்டு சீருடைகள் வழங்கினார்கள். உடன் அரசுத்துறை அலுவலர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், சார்புஅணிகளின் நிர்வாகிகள், கழக நிர்வாகிகள் சிறப்பித்தனர்.