கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள உப்பாரப்பட்டி அடுத்த சந்தகொட்டா வூரை சேர்ந்தவர் சேகர் (60) தொழிலாளி. இவருடைய தம்பி குமார் (45). இவர்களிடையே நில தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த 3-ஆம் தேதி இன்று குமார் தரப்பினர் பிரச்சினைக்குரிய நிலத்தை அளக்க சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து சேகர் மற்றும் அவரது மனைவி வனிதா கேட்டுள்ளனர். அப்போது ஏற்பட்ட பிரச்சினையில் இரண்டு பேரை குமார் தரப்பினர் தாக்கியதாக தெரிகிறது.
இது குறித்து சேகர் ஊத்தங்கரை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து குமார், சிவசக்கரவர்த்தி (23) ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர். இதே போல் குமாரின் மனைவி சங்கீதா தான் தாக்கப்பட்டதாக புகாரின் பேரில் போலீசார் சேகர், வனிதா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.