சந்தூரில் தூய்மை நடை பயணம் விழிப்புணர்வு பேரணி

64பார்த்தது
சந்தூரில் தூய்மை நடை பயணம் விழிப்புணர்வு பேரணி
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் காட்டாகரம் ஊராட்சியில்உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி தூய்மை நடைபயணம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவியர்கள் கொண்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சந்தூர் முக்கிய விதிகளில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கி மீண்டும் மஞ்சப்பை பயன்படுத்துவது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.இந்நிகழ்வில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வரதாசன், வட்டார ஒருங்கிணைப்பாளர் கோவிந்தம்மாள், பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் உதவி ஆசிரியர்கள் உள்ளிட்ட இருபால் ஆசிரியர்கள், ஊர் பொதுமக்கள், துப்புரவு பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், பணிதள பொறுப்பாளர்கள், OHT இயக்குநர்கள் என அனைவரும் கலந்து கொண்டு பிளாஸ்டிக் ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடு ஊராட்சி செயலாளர் கஜேந்திரன் செய்திருந்தார்.

தொடர்புடைய செய்தி