ஊத்தங்கரை, பர்கூர் சட்டமன்ற தொகுதியில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர் மேகநாதனுக்கு ஊத்தங்கரையில் பொன்னாடை போர்த்தி கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர். கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தில் ஊத்தங்கரை, பர்கூர் சட்டமன்ற தொகுதிக்கு புதிய மாவட்ட செயலாளராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மேகநாதனை கட்சி தலைமை கழகம் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதியில் கழக நிர்வாகிகளை சந்தித்தார், அப்போழுது சமூக நீதி பேரவை மாநில துணைத்தலைவர் வழக்கறிஞர் மூர்த்தி பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்.
அப்போது மாநில செயற்குழு உறுப்பினர் சிவானந்தம், பசுமைத்தாயகம் மாவட்ட செயலாளர் கிருபாகரன், மாவட்ட பாட்டாளி தொழிற்சங்க பேரவை செயலாளர் திருநாவுக்கரசு, மாவட்ட இளைஞரணி செயலாளர் ஹரிதாஸ், மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் மணிவண்ணன், ஒன்றிய செயலாளர்கள் வெள்ளியரசு, அருள், வேலன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன், கோவிந்தன், ராமகிருஷ்ணன், பிரபு, நாச்சியப்பன், சதீஷ், கல்லூர் மணி, திருமால், குமார், சிவா, ரெட்டிப்பட்டி மணி, திப்பம்பட்டி குமரேசன், ஜெயராமன் உள்ளிட்ட மாநில மாவட்ட ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.