ஊத்தங்கரையில் டிரான்ஸ்பார்மரில் தீ.

4பார்த்தது
ஊத்தங்கரையில் டிரான்ஸ்பார்மரில் தீ.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள டிரான்ஸ்பார்மர் ஒன்றில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மழை காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து மின்சாரத்தை துண்டித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் இருசக்கர வாகனங்கள் சேதமடைவது தவிர்க்கப்பட்டது. உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

தொடர்புடைய செய்தி