தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி தனது 104-ம் ஆண்டை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் இலவச மருத்துவ மற்றும் கண் பரிசோதனை முகாம் நடத்தியது. வங்கி மேலாளர் பாலமுருகன் முகாமை தொடங்கி வைத்தார். டாக்டர் மதன்குமார் மற்றும் கண் மருத்துவ உதவியாளர் கலையரசன் ஆகியோர் 100-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு கண் மற்றும் பொது மருத்துவ பரிசோதனைகள் செய்து ஆலோசனைகள் வழங்கினர். சத்தான உணவு மற்றும் கண் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.