கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் கல்லாவி பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்று மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்திருந்தது. அதன்படி, இன்று அதிகாலை முதல் அப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால், பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் குடைகளை எடுத்துச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.