ஊத்தங்கரை அதியமான் பப்ளிக் பள்ளிக்கு ஒருங்கிணைந்த கற்றல் விருது. நிறுவனர் முனைவர் சீனிவாச முருகன் பெற்றார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அதியமான் பப்ளிக் பள்ளிக்கு கேம்பிரிட்ஜ் பள்ளி ஒருங்கிணைந்த கற்றலுக்கான அங்கீகார விருதினை வழங்கியது. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக இரண்டாம் ஆண்டு கேம்பிரிட்ஜ் தெற்காசிய பள்ளிகள் மாநாடு மாறிவரும் உலகில் முன்னேற கற்பவர்களை தயார்படுத்துதல் என்ற நோக்கத்துடன் டெல்லியில் மார்ச் 27 மற்றும் 28 தேதிகளில் நடைபெற்றது.
இதில் இந்தியா, நேபாளம், இலங்கை, பூட்டான், பங்களாதேஷ் மற்றும் மாலத்தீவுகளைச் சேர்ந்த சுமார் 1000 கல்வியாளர்கள், பள்ளிகள் மற்றும் சிந்தனைத் தலைவர்கள் பங்கேற்றனர். மாறிவரும் உலகில் வளர்ந்து வரும் கல்வி நிலப்பரப்பில் பள்ளிகள், ஆசிரியர்கள் மற்றும் கற்பவர்களை ஊக்குவிப்பதே இந்த மாநாட்டின் நோக்கமாகும். 2030 ஆம் ஆண்டுக்குள் 44 மில்லியன் புதிய ஆசிரியர்களுக்கான உலகளாவிய தேவையின் பின்னணியில் இந்த மாநாடு நடைபெற்றது. அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அதியமான் பப்ளிக் பள்ளி [ஒருங்கிணைந்த கற்றல் விருது] ஒருங்கிணைந்த கற்றல் விருதினை பெற்றது.