கல்லாவி: நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்.

23பார்த்தது
கல்லாவி: நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம், கல்லாவியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நாளை, பிப்ரவரி 05, 2026 அன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை இலவச மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்களுக்கு இரத்த பரிசோதனை, கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஸ்கேன், கண் பரிசோதனை, மகப்பேறு, இதய நோய், காது, மூக்கு, தொண்டை உள்ளிட்ட 17 சிறப்பு நிபுணர்களின் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். மாவட்ட ஆட்சித்தலைவர் ச. தினேஷ் குமார் பொதுமக்களை கலந்துகொண்டு பயன்பெற அழைப்பு விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி