கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை போலீசார் எம். ஜி. ஆர். நகர் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்ற ஒரு நபரை பிடித்து போலீசார் சோதனையிட்ட போது அவர் ஊத்தங்கரை எம். ஜி. ஆர். நகரைச் சேர்ந்த சுதர்சன் (33) என்பதும் விற்பனைக்காக 30 கிராம் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து கஞ்சாவும் பறிமுதல் செய்தனர்.