கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே மகனூா்பட்டி ஊராட்சி, முசிலிகொட்டாய் கிராமத்தில் புதிய நியாயவிலைக் கடையை பா்கூா் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் தே. மதியழகன் திறந்துவைத்து பொதுமக்களுக்கு ரேஷன் பொருள்களை வழங்கினாா். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ கிருஷ்ணமூா்த்தி, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் கலில் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். இது அப்பகுதி மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.