கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூா் பெரிய ஏரியில் இருந்து 33 ஏரிகளுக்கு தண்ணீா் கொண்டு செல்லும் கால்வாய்ப் பணிக்கு ரயில்வே மேம்பாலம் வழியாக செல்வதற்கு அனுமதி வழங்கக் கோரி, ஊத்தங்கரை எம்எல்ஏ டி. எம். தமிழ்செல்வம் சேலம் ரயில்வே கோட்ட மேலாளா் பன்னாலாலிடம் மனு அளித்துள்ளாா். இந்த மனுவில், கால்வாய் பணிகளை மேற்கொள்ள அனுமதி அளிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. இதில் பல முக்கிய பிரமுகர்களும் உடனிருந்தனா்.