கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே சின்னப்பநாயக்கனூரில் லாரி பழுது நீக்கும் கடை நடத்தி வரும் ராஜ்குமார் என்பவரின் கடையில் நிறுத்தப்பட்டிருந்த திருவண்ணாமலையைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரின் லாரியின் இரண்டு டயர்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து ராஜ்குமார் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.