கிருஷ்ணகிரி: தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

77பார்த்தது
கிருஷ்ணகிரி: தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் இணைந்து நடத்திய மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் ச. தினேஷ் குமார் துவக்கி வைத்து, 162 மாற்றுத்திறனாளிகளுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். உடன், மாவட்ட வருவாய் அலுவலர் அ. சாதனைக்குறள், துணை ஆட்சியர் (பயிற்சி) செல்வி. க்ரிதி காம்னா இ. ஆ. ப. , மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கோபு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கௌரிசங்கர், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் முருகேசன் உள்ளிட்ட பலர் உள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி