ஊத்தங்கரை அருகே ஏரி கரையை சீரமைக்க கோரிக்கை

523பார்த்தது
ஊத்தங்கரை அருகே ஏரி கரையை சீரமைக்க கோரிக்கை
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள கெங்கபிராம்பட்டி ஊராட்சியில் உள்ள சித்தகவுண்டன் ஏரியின் கரை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புயலால் சேதமடைந்தது. தற்போது ஏரியில் தண்ணீர் நிரம்பும்போது, அருகில் உள்ள விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்து பயிர்கள் சேதமடைவதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதனால், அதிகாரிகள் உடனடியாக ஏரிக்கரையை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி